மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை

0

நாகர்கோவிலில் மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் புத்தேரி ஆட்டுபட்டி காலனியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 67), தொழிலாளி. இவருடைய மகன் கோலப்பன்(34). இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோலப்பன் புத்தேரி குளத்தில் இருந்து சில மீன்களை பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தார்

அப்போது வீட்டில் இருந்த தந்தை தங்கவேலுவிடம் மீன் குழம்பு வைக்க உதவுமாறு கேட்டார். அதற்கு தங்கவேலு மறுத்துவிட்டார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதத்துடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தங்கவேலு, மகன் கோலப்பனை கீழே தள்ளினார்.

இதில் கோலப்பனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோலப்பனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனைத்ெதாடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.   இதுகுறித்த புகாரின்போில் தங்கவேலு மீது வடசேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மீன் குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


Post a Comment

0Comments
Post a Comment (0)