உக்ரைனில் தவிக்கும் குமரியை சேர்ந்தவர்கள் அணுக வேண்டிய செல்போன் எண்கள்...

0


உக்ரைனில் தவிக்கும் குமரி மாவட்ட மக்கள் அணுக வேண்டிய செல்போன் எண்களை கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 உக்ரைனில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு மாநில அவசர கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 1070-ஐ தொடர்பு கொள்ளலாம். இல்லை எனில் ஜெசிந்தா லாசரசை 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் டெல்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் உள்ள உக்ரைன் அவசர உதவி மையத்தை 9289516716 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், ukrainetamils@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம். 

அதோடு குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை 9445008139 என்ற செல்போன் எண்ணிலும், pagkkm@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பெயர், வயது, பாலினம், பாஸ்போர்ட்டு, விசா, கல்வி பயிலும் நிறுவனத்தின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், மின்னஞ்சல், வசிக்கும் முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் தொலைபேசி எண் ஆகிய முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)