பிக்பாஸ் அல்டிமேட் முடிந்த கையோடு தொடங்கும் பிக் பாஸ் 6 – தொகுப்பாளர் யார்? எப்போ தொடங்குகிறது தெரியுமா?

0பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த கையோடு பிக் பாஸ் சீசன் 6 தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss Tamil 6 Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து ஹாட்ஸ்டார் விஐபியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இதுவும் வெற்றிகரமாக கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியை சிம்பு அருமையாக தொகுத்து வழங்கிய தான் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.பிக்பாஸ் அல்டிமேட் முடிந்த கையோடு பிக் பாஸ் சீசன் 6 தொடங்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் மாத இறுதியில் புதிய சீசனை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. போட்டியாளர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்ற தேடுதலிலும் இந்த நிகழ்ச்சி குழு இறங்கியுள்ளது.


அதேசமயம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா சிம்புவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிம்புவும் கமலுக்கு நிகராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் சீசன் 6ஐ தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)