கன்னியாகுமரி மாவட்டம் கள்ளக்காதலனை திருமணம் செய்து கொள்ள சேமியா உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய தாயை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனாராக இருந்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா( 21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. அது போல் சரண் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா தனது கணவர் ஜெகதீஷுக்கு தகவலளித்துள்ளார். குழந்தை மயக்கமடைந்ததாக கூறியதை கேட்டதும் வேலைக்கு சென்றிருந்த ஜெகதீஷ் பதறி அடித்து கொண்டு வீடு வந்தார்.
சேமியா உப்புமாவில் விஷம்
சம்பவத்தன்று வீட்டில் சேமியா உப்புமா செய்தேன். இது எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒன்றரை வயது மகனுக்கு கொடுப்பதற்கு முன்னர் அந்த உப்புமாவை நுகர்ந்து பார்த்தேன். அதிலிருந்து மருந்து வாசனை ஏதும் வரவில்லை. இதனால் ஒன்றரை வயது குழந்தைக்கு கொடுத்தேன். ஆனால் மூத்த மகள் குறைவாக சாப்பிட்டதால் அவர் தப்பிவிட்டார் என வாக்குமூலம் அளித்தார். அன்பு, பாசம், அக்கறை கலந்து சேமியா உப்புமாவை அம்மா ஊட்டுவதாக நினைத்த குழந்தை, தாயின் சதித் திட்டம் தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.