அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்..

0

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபர் மது போதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்ய தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் அங்கிருந்த பயணிகள் விரட்டி சென்று வாலிபரை மடக்கி பிடித்து, புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. அப்போது அந்த வாலிபர் திடீரென பெண் போலீசின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடும்படி கூறி அழுதார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அண்ணா பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Post a Comment

0Comments
Post a Comment (0)