தூத்தூரில் கடல்நீரை மேகம் உறிஞ்சுவது போல் அதிசய நிகழ்வு


தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கடல் பகுதியில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் தூத்தூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும், பலத்த காற்று காரணமாக கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது, திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சுவது போல் தண்ணீர் மேல் நோக்கி எழுந்த அதிசய நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதை அங்கிருந்த மீனவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதி விட்டனர். இந்த காட்சி  தற்போது வைரலாகி வருகிறது

Post a Comment

புதியது பழையவை