தொடர் விடுமுறை எதிரொலியால் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி களைகட்டியது.
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
மேலும், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குவிந்தனர்இந்த தொடர் விடுமுறை காரணமாக ேநற்று 2-வது நாளாக தமிழகத்தின் பல மாவட்டம் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். அதைதொடர்ந்து கடலில் புனிதநீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்வதற்கு படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து திரும்பினர்.
இதேபோல், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி ஆகிய இடங்களிலும் சுற்றுலா பணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரை சாலையில் சுற்றுலா பணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கன்னியாகுமரி போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.சுற்றுலா பணிகள் வருகையில் கன்னியாகுமரி களைகட்டிய உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.