ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?

0

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ட்விட்டரில் திடீரென உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் 'பீஸ்ட்'. முதலில் திரையரங்குகளில் ரிலீஸான இந்த திரைப்படம், இப்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது. ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 'பீஸ்ட்' டப் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு முதலாக 'பீஸ்ட்' திரைப்படம் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் வெளியிட்ட ட்வீட்டே இந்த டிரெண்டிங்குக்கு காரணமாக அமைந்துள்ளது. 'பீஸ்ட்' திரைப்படத்தில் 'ரா' உளவுத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய், கிளைமாக்ஸில் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்குள் ஜெட் விமானத்தில் சென்று தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார். அப்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்தும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் லாவகமாக தப்பித்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதனிடையே, இந்த சீனை வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் கேப்டன் சிவராமன் சஜ்ஜன், "இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன..." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பதிவைதான் தற்போது நெட்டீசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். முதலில் இந்திய அளவில் டிரெண்டான இந்த ட்வீட், ஒருகட்டத்துக்கு மேலே சர்வதேச டிரெண்டாக மாறிப்போனது.

Post a Comment

0Comments
Post a Comment (0)