ஒன்வேயில் போன மினி பஸ்... டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து

0

இரணியல் ரயில் நிலையம் அருகே மினி பேருந்து பள்ளத்தில் சரிந்து விபத்து ஏற்பட்டதில் ஓரத்தில் நின்ற டிரான்ஸ்பார்மரில் உரசிய நிலையில் பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் அருகே பரம்பை பகுதியில் இரட்டை ரயில் தண்டவாளம் இணைப்பு பணிகளுக்காக உயர் மட்ட பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரணியல்கோணம் வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் சந்தையில் இருந்து அழகியமண்டபம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் நெய்யூர் ஆத்திவிளை வழியாக சென்று வருகிறது.

அழகியமண்டபத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரணியல் வழியாக திங்கள் சந்தை செல்கிறது. ஆனால் மினி பேருந்துகள் அனைத்தும் இரணியல் வழியாக செல்லாமல் ஓரு வழி பாதை வழியாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று பி.ஜெ.ஜெ மினி பேருந்து அதிக பயணிகளுடன் போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழி பாதையில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விட்ட போது எதிர்பாராத விதமாக மினி பேருந்து சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் சரிந்து டிரான்ஸ்பார்மரில் உரசி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்...

Post a Comment

0Comments
Post a Comment (0)