டி ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?? தற்போதைய நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு.!

0


 தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் டி ராஜேந்தர். இவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி அந்த நிலையில் அவருடைய மகன் நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)