ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்நோயாளி தூக்கு போட்டு தற்கொலை


ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:-
சிகிச்சை
நாகர்கோவில் வடசேரி குன்னவிளை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 74). இவர் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாசிலாமணி, வார்டில் இருந்த செவிலியர்களிடம் கழிவறை செல்வதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழிவறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் ஊழியர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள ஜன்னல் கம்பியில் மாசிலாமணி துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாசிலாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த மாசிலாமணி, குணமடையாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது                 தெரியவந்தது. இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

புதியது பழையவை