மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

0

சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை சேர்ந்தவர் நீலேஸ்வரன் (வயது 33), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவருடைய மனைவி பிரியங்கா கண்டித்தார். இனிமேல் இதுபோன்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வரக்கூடாது எனவும் தெரிவித்தார். 

இந்தநிலையில் நீலேஸ்வரன் விஷம் குடித்து விட்டு வீட்டில் உயிருக்கு போராடினார். உடனே குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)