மங்காத்தா 2 படம் பற்றிய சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா.

அஜித் வில்லனாக மிரட்டி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இப்படியான நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மங்காத்தா 2 படம் பற்றிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஏற்கனவே மங்காத்தா 2 படத்தின் கதை ரெடி என கூறி வந்த வெங்கட் பிரபு தற்போது கதையை அஜித்திடம் கூறிவிட்டேன், விரைவில் மங்காத்தா படம் உருவாகும் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Post a Comment

புதியது பழையவை