கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும், விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்தநிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகளின் குவிந்தனர். உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்ததை காணமுடிந்தது. அவர்கள் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்தனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய ஏராளமான முஸ்லிம் மக்கள் மாலையில் குடும்பமாக கன்னியாகுமரி வருகை தந்து கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். இதேபோல், கடற்கரை சாலை, காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டம், சுற்றுசூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)