குமரியில் ஒரே நாளில் 28,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி..

0

குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 28 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 கன்னியாகுமரி நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 28 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

 கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இன்னும் சுமார் 2½ லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 32-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 581 இடங்களில் தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. இதற்காக 571 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)