காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

0

காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி தக்கலை, காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் குமாரபுரம் அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கொற்றிக்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

 அப்போது, அங்கு ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனையிட்ட போது மூடை, மூடையாக 600 கிேலா ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியுடன் காரை பறிமுதல் செய்து அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)