புதிதாக 78 பேருக்கு கொரோனா..

0

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் 985 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 41 ஆண்கள் மற்றும் 37 பெண்கள் என மொத்தம் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

 அதாவது அகஸ்தீஸ்வரம்-4, கிள்ளியூர்-5, குருந்தன்கோடு-4, மேல்புறம்-14, முன்சிறை-17, நாகர்கோவில்-12, ராஜாக்கமங்கலம்-3, திருவட்டார்-3, தோவாளை-11, தக்கலை-4 மற்றும் சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு அதிகம் இருப்பவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் இதுவரை 2 கட்ட தடுப்பூசியும் செலுத்தாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்


Post a Comment

0Comments
Post a Comment (0)