மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி..

0

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

 கன்னியாகுமரி நாகர்கோவில் : அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 பின்னர் அவர் பேசும் போது, "குமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் 13-ந் தேதி திறக்க உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த முன்வர வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி அதிநவீன வாகனத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

 இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)