படத்தை காட்டிலும் அதில் கல்லா கட்டும் சமந்தா.. ஒரு மாதத்துக்கு இத்தனை கோடியா?

0

 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகை சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தா கதீஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது


இதற்கு முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். எந்த ஒரு நடிகையையும் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடினால் அவரது மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் சமந்தா அந்த பாடலால் மிகவும் ஃபேமஸ் ஆனார்.

இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாமிடத்தில் சமந்தா உள்ளார். இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 கோடி சம்பளமாக பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் இன்னொரு விஷயத்திலும் சமந்தா கல்லா கட்டி வருகிறார்.


தற்போது பிரபல நடிகைகள் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள் தங்களது பொருட்களை, அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகள் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர்.
அவ்வாறு சமந்தா இன்ஸ்டாகிராம் மூலம் நிறைய பணத்தை சம்பாதித்து வருகிறார். அதாவது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று விளம்பரங்களை தனது சமூக வலைதளங்களில் அறிமுகம் செய்து வருகிறார். ஒரு விளம்பரத்திற்கு குறைந்தபட்சம் 3 கோடி வரை சமந்தா பெற்றுவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிகினி உடையை விளம்பரப்படுத்துவதற்காக அந்த உடையில் சமந்தா காட்சியளித்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவைத் தாண்டி சமந்தா இவ்வாறு விளம்பரங்களிலும் கல்லாகட்டி வருகிறார்.
Post a Comment

0Comments
Post a Comment (0)