சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ள லட்சுமிமேனன் – வெளியான தகவல்.

0


ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக லக்ஷ்மி மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டில் வெளியான மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான கதாநாயகியை தேடும் பணியில் படக்குழு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர் அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதற்குப் பிறகு இப்படத்தில் திரிஷா நடிப்பார் என்ற செய்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கும்கி, ரெக்க, வேதாளம், மிருதன் போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)