கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை சிறுவன் உள்பட 2 பேர் கைது..

0
கன்னியாகுமரி நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று அறுகுவிளை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசி போலீசாரை தாக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த சஜின் என்ற சதீஷ் (வயது 21) மற்றும் 16 வயதுடைய சிறுவன் என்பதும் இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Post a Comment

0Comments
Post a Comment (0)