நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சூறைக்காற்றால் மின்மாற்றி சாய்ந்தது; 3 மின்கம்பங்கள் சேதம்...

0

நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சூறைக்காற்றால் மின்மாற்றி சாய்ந்தது. 3 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

 கன்னியாகுமரி நாகர்கோவில்,

 நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சூறைக்காற்றால் மின்மாற்றி சாய்ந்தது. 3 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

 சாலையில் சாய்ந்த மின்மாற்றி 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோல நேற்று இரவு முதல் விடிய, விடிய நாகர்கோவில் பகுதியில் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு பலத்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது.

தென்னை மரம் விழுந்த வேகத்தில் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. மின்மாற்றி விழுந்த வேகத்தில் அதன் அருகில் அடுத்தடுத்து நிறுவப்பட்டிருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்தன. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியபோது மத்தாப்பு கொளுத்தும்போது தீப்பொறி பறப்பதைப் போன்று தீப்பொறிகள் பறந்தன. மேலும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் வழியாகச் சென்ற மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியும், ரெயில் நிலைய பகுதியும் இருளில் மூழ்கியது. இந்த சம்பவம் நிகழ்ந்த நேரம் அதிகாலை நேரமாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.Post a Comment

0Comments
Post a Comment (0)