குமரியில் 36,403 பேருக்கு கொரோனா தடுப்பூசி

0

குமரி மாவட்டத்தில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 36 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் நடந்த மெகா முகாமில் மொத்தம் 36 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மெகா முகாம் 

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

 கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் குமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்காக 525 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முகாம்கள் நடைபெற்றன. நாகர்கோவிலை பொறுத்த வரையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. அதில் பெரும்பாலானோர் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தினர்.

மீனவ கிராமங்கள்

 மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் செலுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றில் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சின்னமுட்டம், தூத்தூர், நீரோடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மருத்துவக்குழுவினர் மூலம் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்து 403 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Post a Comment

0Comments
Post a Comment (0)