நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை..

0

நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

  நாகர்கோவில், நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

 தற்கொலை 

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் ஜோசப் ஜெயக்குமார் (வயது 51), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

 அப்போது ஜோசப் ஜெயக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Post a Comment

0Comments
Post a Comment (0)