பார்வதிபுரம் அருகே டீ கடையில் தீ விபத்து..

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் இங்கு டீ குடித்து கொண்டிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் சந்தைகளுக்கு வருபவர்கள் டீ கடையில் நின்று டீ குடித்து சென்றனர்.

மேலும் சிலர் அங்கு இருந்த செய்தித்தாள்களை வாசித்து கொண்டே டீ கடையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் டீ கடையில் இருந்த சமையல் எரிவாயு (சிலிண்டர்) திடீரென வெடித்து சிதறியது. இதில், கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் டீ கடையின் உரிமையாளர், கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் உட்பட 8 பேர் பலத்த படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவாத கூறப்படுகிறது..


இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ​கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த மூசா (வயது 48) பிரவின் (வயது 25) சேகர் (வயது 52) மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன் (வயது 66) சுதா (வயது 43) சந்திரன் (வயது 62) சுசீலா (வயது 50) மற்றும் ஒருவர் உட்பட 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமடைந்தாக தெரிவித்துள்ளார்.

மேலும், தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)