திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்..

0

குளு, குளு சீசன் நிலவும் திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் 

கன்னியாகுமரி திருவட்டார்,

 விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று சற்று அதிகமாக இருந்தது. சாரல் மழையுடன் குளு குளு சீசனும், குளுமையான காற்றும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நீச்சல் குளத்திலும் சிறுவர்கள் குதூகலத்துடன் பெற்றோர் துணையுடன் குளித்ததை காணமுடிந்தது.

 வாகனங்களில் ஏராளமானோர் வந்ததால் திற்பரப்பில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

 ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)