ராக்கெட்ரி Review

0

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மாதவனின் ராக்கெட்ரி படத்தின் விமர்சனம்.

தன்னுடைய குடும்பத்தை விட, தனது தாய்நாடு தான் முக்கியம் என அளவுக்கு அதிகமாக நேசித்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானி தான் நம்பி நாராயணன். அவர் மீது தேச துரோக புகார் கூறி, அதன் விளைவாக, அவரும், அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டமும், அவர்கள் கடந்து வந்த அவமானங்கள் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க கொடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி.

இந்த படத்துடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் மாதவன் தான் செய்துள்ளார். நம்மிடையே ஒரு சாக்லேட் பாயாக பரிட்சயமான மாதவன், தனக்குள் இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை அழகாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் மாதவன் தான் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படத்தில் ரியல் நம்பி நாராயணனை, கதையில் கொண்டுவந்து சேர்ந்ததை பார்க்கும்போது, மாதவன் ஒரு இயக்குனராக ஜெயித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)