நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

0

டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 இதுதொடர்பாக கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 இதுதொடர்பாக கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 


 குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

 இந்த நிலையில் டெல்லியில் இருந்து நாகர்கோவில் வரும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று அதிகாலை நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்த நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார்ராஜ், ஜோசப் ஆகியோர் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.


 அப்போது, முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் உள்ள இருக்கையின் கீழ் கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 3 பொட்டலங்களாக மொத்தம் 6 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள். இதேபோல கடந்த 12-ந் தேதியன்று மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)