கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தின் சில பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன்படி , நாகர்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :

குறிப்பாக, பூதப்பாண்டி, தோவாளை, கொட்டாரம், மயிலாடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பப் பூ சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
மேலும் ,குழித்துறை ,தக்கலை , மார்த்தாண்டம் , குலசேகரம் ஆகிய பகுதிகளில் வானம் முழுக்க மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு விட்டு விட்டு , கனமழை பெய்துவருகிறது.

மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி :

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கேரளாவில் மிக கன மழை பெய்து வருவதால் , எல்லை பகுதிகளில் மாவட்டத்தின் பிற பகுதிகளை விடஅதிகன மழை பெய்து வருகிறது

Post a Comment

0Comments
Post a Comment (0)