தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

0


தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து சைமன் என்ற மீனவர் உயிழிந்தார். தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர் துறைமுக நுழைவாயிலில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து பலியானர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த துறைமுகத்தில் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடந்து வருகின்றன.

 எனவே, துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

 பின்னர் நேற்று நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று காலை சைமன் என்பவர் மீன்பிடிக்க சென்ற படகு துறைமுக நுழைவு வாயிலில் வந்தபோது எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவிந்து விபத்து ஏற்பட்டது. மேலும் அதில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் தூக்கி விசபட்டனர். 

இதில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் 52 என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற மீனவர்களின் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கடலில் தத்தளித்த அவர்களை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)