காதலியுடன் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

0


நாகர்கோவிலில் மாணவர் காதலியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 


குமரி மாவட்டம் மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 47). இவர்களுக்கு உமா காயத்ரி (23), உமா கவுரி (21) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

 செல்லம்பிள்ளை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் வேலை விஷயமாக முத்துலட்சுமி தனது 2 மகள்களுடன் நாகர்கோவில் செட்டிகுளம் சிதம்பரநகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்தார்.

 முத்துலட்சுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். மகள்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தனர்.

 வாலிபருடன் தற்கொலை

 இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வேலை முடிந்து முத்துலட்சுமி வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்த நிலையில் கிடந்தது. 

வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரே சேலையில் மகள் உமாகவுரியும், ஒரு வாலிபரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்கில் தொங்கிய உடல்களை கீழே இறக்கினர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். காதல் விவகாரம் விசாரணையில், உமாகவுரியுடன் தூக்கில் பிணமாக தொங்கியவர் மருங்கூர் ராமபுரம் பகுதியை சேர்ந்த ஆபத்துகாத்தான் மகன் மோகன் (24) என்பது தெரியவந்தது. மோகனும், உமாகவுரியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

 உமாகவுரியின் தந்தை செல்லம்பிள்ளை இறந்தபிறகு, உமாகவுரி குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார். இருப்பினும் மோகனும், உமாகவுரியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் உமாகவுரி வீட்டில் இருந்தார். அப்போது மோகன் உமாகவுரியை காண வீட்டுக்கு வந்துள்ளார். போலீசார் விசாரணை இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் மோகனும், உமாகவுரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 ஆனால் அவர்களுடைய தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை முடிவை எடுத்தார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தூக்கிட்டு தற்கொலை செய்த மோகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாகர்கோவிலில் தூக்குப்போட்டு காதலியுடன் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Post a Comment

0Comments
Post a Comment (0)