கன்னியாகுமரி அஞ்சுகிராமம் :
அஞ்சுகிராமம் அருகே உள்ள நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய கட்டிட தொழிலாளி. இவர், தனது வீட்டுக்கு ேதவையான பொருட்களை வாங்குவதற்காக ஸ்கூட்டரில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு அஞ்சுகிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள், அஞ்சுகிராமம் வடக்கு பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது,
திடீரென ஸ்கூட்டரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால், பதற்றமடைந்த தொழிலாளி, மனைவியுடன் கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் புகை அதிகளவில் வெளியேறி தீப்பற்றியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த தொழிலாளியும், அவரது மனைவியும் ஸ்கூட்டரை சாலையில் போட்டு விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஸ்கூட்டரில் தீ மள மளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைகண்ட அருகில் உள்ள கடைக்காரர்கள் வாளியில் தண்ணீரை கொண்டு வந்து ஸ்கூட்டர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டதால் கணவன்-மனைவி இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் ஸ்கூட்டருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...
கருத்துரையிடுக