தக்கலை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது...

0

தக்கலை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார். 

தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ்-2 படித்து முடித்து நர்சிங் படிப்பதற்காக கலந்தாய்வுக்கு தயாராகி வருகிறார். மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
 இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்தஊர் திரும்பிய மாணவியின் தந்தை, இரவு நேரங்களில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மாணவிக்கு பாலியல் ெதால்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அந்த மாணவி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரியிடம் புகார் செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரின் பேரில் போலீசார், மாணவியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)