ட்ரெண்டிங்காகும் பொன்னியின் செல்வன் புடவை!!.. அசத்தலாக நெய்திருக்கும் புடவையின் புகைப்படங்கள் வைரல்

0

பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை வைத்து நெய்திருக்கும் புடவைகளின் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது...லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்ச அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்


இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் புகைப்படங்களை அப்படியே அச்சு அசலாக புடவைகளில் நெய்து அசத்தியுள்ளனர். அந்த அழகான புடவைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
Post a Comment

0Comments
Post a Comment (0)