ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பஸ்களை மறித்து திடீர் போராட்டம்

0

மார்த்தாண்டம் சந்திப்பில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பஸ்களை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

 ஓய்வு பெற்ற போலீஸ்காரர்

 குமரி மாவட்டத்தில் வீடுகளில் உள்ள கழிவு நீரை மழைநீர் ஓடையில் விடக்கூடாது என்றும், அதற்காக உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுமாறும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜன் என்பவரின் வீட்டு கழிவு நீரை ஓடையில் விடக் கூடாது என்று நகராட்சி சார்பில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வீட்டில் உள்ள கழிவு நீர் தொடர்ந்து மழைநீர் ஓடையில் வெளியேறியதால் நகராட்சி சுகாதார பணியாளர்கள் சிமெண்டு மூலம் கழிவுநீர் பாயும் குழாயை அடைத்தனர்.


இந்த நிலையில் நேற்று ராஜன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்த்தாண்டம் சந்திப்பில் சாலையில் நின்று பஸ்களை போக விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் சிலர் அவரை பிடித்து சாலையோரம் நிறுத்தி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை ஒரு ஆட்டோவில் குண்டு கட்டாக ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, அவரிடம் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு பெற்று கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து ராஜனின் தனிநபர் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Post a Comment

0Comments
Post a Comment (0)