குமரி மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய கண்காணிப்பு

0

கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது‌. இதைத்தொடர்ந்து மதுரை, சேலம், பகுதி களிலும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. 


இதை யடுத்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்திலும் பாது காப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் கன்னி யாகுமரி குளச்சல் தக்கலை சப் டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீசார் 2 ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர்.

 இன்று காலையிலும் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டி குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை உட்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 


நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட முக்கிய மான கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.


 நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியா குமரியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிரா மங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


 மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வாகனசோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது.


 ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை சோ தனை செய்தனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)