தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

0

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

 நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன் கோவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் 600 எம்.எம். பிரதான குழாயில் நாகர்கோவில் திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு பெட்ரோல் பங்க் அருகில் , இசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் அருகுவிளை வெள்ளாளர் தெரு ஆகிய நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகுவதால் மேற்படி பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது . 

இதனால் நகரில் இடலாக்குடி , வடிவீஸ்வரம் , வாகையடி, கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Post a Comment

0Comments
Post a Comment (0)