“மாமன்னன்’ படத்தில் உதயநிதியின் அப்பா வேடத்தில் வடிவேலு?

0

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடிகர் வடிவேலு நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ என்கிற இருவேறு சமூக சீர்த்திருத்த படங்களைத் தந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தான் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். படத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


 இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 மாமன்னன் படப்பிடிப்பு நிறைவையொட்டி, அதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

இந்நிலையில், காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு இந்தப் படத்தில் அழுத்தமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை எந்த படங்களிலும் ஹீரோக்களுக்கு தந்தையாக வடிவேலு நடிக்காத நிலையில், இந்தப் படத்தில் முதன்முறையாக படத்தின் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக அவர் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 


பாசமிகு தந்தையாக நடித்துள்ள வடிவேலுவின் இந்தப் புதிய பரிமாணத்தைக்காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குவதால், மாமன்னன் படத்தின் மீது எதிர்ப்பு அதிகம் இருந்து வந்த நிலையில், தற்போது வடிவேலு தந்தை ரோலில் நடிப்பதாக கசிந்துள்ள தகவலால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)