SINAM - Movie Review

0

ஹரி இயக்கத்தில் வெளியான ‘யானை’ படத்தினை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘சினம்’. நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் சந்திக்கும் பிரச்சனையும், அதற்கான முடிச்சுக்கள் அவிழ்க்க படுவதும் தான் ‘சினம்’ படத்தின் கதை.

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சினம்'. ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளனர்.

2 மணிநேரம் ஓடும் இந்தப்படம் பேமிலி ஆடியன்சை கவரும் வகையில் சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இரவு தன் மனைவியை முகம் தெரியாத நபர்கள் கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அவர்கள் யாரென்று கண்டுபிடித்து தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கில் களம் இறங்குகிறார் படத்தின் கதாநாயகன்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. மாஃபியா, குற்றம் 23 வரிசையில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய்.

படத்தின் ஸ்லோவான திரைக்கதையும், யூகிக்க கூடிய காட்சிகளும், முதல் பாதியிலே படத்தின் பெரும்பாலான காட்சிகள் தொய்வை தருவதும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது. நேற்றைய தினம் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியான நிலையில் இன்று அருண் விஜய்யின் ‘சினம்’ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rating : 2.5/5

Post a Comment

0Comments
Post a Comment (0)