பகவதி அம்மன் கோவிலில் ரூ.18 லட்சம் உண்டியல் வசூல்..

0
கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி,

 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன.
 இந்தநிலையில் நேற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.17 லட்சத்து 68 ஆயிரத்து 994 ரொக்கமாகவும், 70 கிராம் தங்கம், 301 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.



Post a Comment

0Comments
Post a Comment (0)