நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள பள்ளியில் குருந்தன்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அவர்களில் 25 பேர் நேற்று காலை 8 மணி அளவில் தனியார் வேனில் பேயோடு வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ராஜாக்கமங்கலம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு தனியார் கல்லூரி பஸ்சின் மீது வேன் மோதியது.
இதில் வேனின் முன்பக்க கண்ணாடியும், பஸ்சின் பின்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. வேனில் இருந்த மாணவ ,மாணவிகளில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர் அவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து பஸ் டிரைவர் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் விமல் பிரியன் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.