'டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு தொடக்கம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

0


 

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

 அண்மையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பின்தங்கியது. நடிகர் அருள்நிதியை பொருத்தவரை சமீப்பத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘டைரி’ படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)