நகைக்கடையில் இருந்த 32½ பவுன் நகைகள் மாயம்..

0

தக்கலை அருகே நகைக்கடையில் இருந்த 32½ பவுன் நகைகள் மாயமானது தொடர்பாக கடை ஊழியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம், வலிய வீட்டு விளையை சேர்ந்தவர் நேசராஜ் (வயது 48). இவர் மேக்காமண்டபம் ஜங்ஷனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் வேர்க்கிளம்பியை அடுத்த மாவறவிளையை சேர்ந்த சேம்ராஜ் என்பவரின் மகன் ஜியுக்கிளான் (25) என்பவர் கண் காணிப்பு கேமரா ஆபரேட்டராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு கடையில் இருந்த 31½ பவுன் எடை கொண்ட 15 தங்க வளையல்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.


32½ பவுன் மாயம் 

அப்போது கடந்த 4 மாதங்களாக காட்சிகள் பதிவாகாமல் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது மேலும் 8 கிராம் நகை உள்பட மொத்தம் 32½ பவுன் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து கடை ஊழியரான ஜியுக்கிளானிடம் கேட்டபோது ஒரு பவுன் நகை மட்டும் எடுத்ததாகவும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் கூறியபடி பணத்தை கொடுக்காததால் ஜியுக்கிளான் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேசராஜ் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில் நகைக்கடையில் இருந்து ரூ.32½ பவுன் நகை மாயமானது தொடர்பாக கடை ஊழியர் ஜியுக்கிளான் மீது கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Post a Comment

0Comments
Post a Comment (0)