குமரி மாணவர் கொலை வழக்கை தமிழகத்துக்கு மாற்ற கேரள போலீஸ் முடிவு மாணவரின் தந்தை எதிர்ப்பு

0


திருவனந்தபுரம் : குமரி மாணவரை அவரது காதலியே கொன்ற வழக்கை தமிழகத்திற்கு மாற்ற கேரள போலீஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு கொல்லப்பட்ட மாணவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாணவரை கொன்ற காதலி 

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்தார். ஷாரோன்ராஜிம், கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் ஷாரோன்ராஜிக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். 
ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் காதலனை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து அவர் கொன்றது விசாரணையில் அம்பலமானது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கேரள போலீசார் ஈடுபட்ட போது திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
 இதனால் அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள போலீஸ் விசாரணை

 மேலும், இந்த வழக்கில் தடயங்களை அழிக்க உதவியதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கின் விசாரணையை பாறசாலை போலீசார் மேற்கொண்டனர். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியதாக ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் குற்றம்சாட்டினார். பின்னர் இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு தான் காதலி கிரீஷ்மா மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்ட இடமான காதலி வீடு குமரி மாவட்டத்தில் உள்ளது.
 இதனால் மேற்கொண்டு ஆதாரத்தை சேகரிக்க கேரள போலீசார் கிரீஷ்மா வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த வேண்டிய நிலை உள்ளது. 

தமிழகத்திற்கு மாற்ற முடிவு

 இதற்கிடையே பாறசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் ஒரு ஆடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், மாணவர் கொலை வழக்கின் விசாரணை பாதிப்பதை போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மந்திரி ஆன்றனிராஜூ தெரிவித்துள்ளார். இதனால் கேரள போலீசாருக்கு இந்த வழக்கை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. 

 

Post a Comment

0Comments
Post a Comment (0)