கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை நீடித்து வருகிறது. நாகா்கோவில் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை நீடித்து வருகிறது. நாகா்கோவில் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
பிற்பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழையாக கொட்டியது. இதனால் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டாறு சாலை, மீனாட்சிபுரம் சாலை, வடசேரி அசம்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டுநா்கள் இதில் தத்தளித்தபடி சென்றனா். பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதனல் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவி யில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் 12 ஆவது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடா் மழையால், மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள்.
அருமநல்லூா், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், சுசீந்திரம், தக்கலை பகுதிகளில் உழவுப் பணி மற்றும் நெல் நாற்று நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களில் மழை நீா் தேங்கி உள்ளதால் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 41.34 அடியாக இருந்தது. அணைக்கு 570 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 122 கன அடி தண்ணீா் மதகுகள் வழியாகவும், 536 கன அடி உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.73 அடியாக உள்ளது, அணைக்கு 432 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 15.28 அடியாக உள்ளது. அணைக்கு 211 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 122 கன அடி தண்ணீா் மதகுகள் வழியாகவும், 536 கன அடி உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.73 அடியாக உள்ளது, அணைக்கு 432 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 15.28 அடியாக உள்ளது. அணைக்கு 211 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது
அணையிலிருந்து 150 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 15.38 அடியாகவும், பொய்கை அணை நீா்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீா்மட்டம் 44.80 அடியாகவும் உள்ளது. நாகா்கோவில் நகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீா்மட்டம் 16.20 அடியாக உயா்ந்துள்ளது. மழைக்கு ஏற்கெனவே 15 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், கிள்ளியூா் வட்டத்தில் வியாழக்கிழமை மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி : கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம்,நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.