கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கால்வாயில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு மாணவிகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
தக்கலை அருகே வேர்கிளம்பியில் டிரினிட்டி பள்ளியின் பஸ் நேற்று காலை சாமியார்மடம் பகுதியில் டேரின் நிதியா 9, இவாஞ்சலின் 4, என இருமாணவிகளை ஏற்றிக்கொண்டு பட்டணம்கால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் கால்வாயில் கவிழந்தது. அப்பகுதி மக்கள் மாணவிகளையும், டிவைர் ஆன்றணி மைக்கேல், பஸ் உதவியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு மாணவிகளும் தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தக்கலை போலீசார் விசாரணை நடத்தினர்