தயாரிப்பாளர்கள் திடீர் கட்டுப்பாடு: விஜய், அஜித் படங்களுக்குச் சிக்கல்

0

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இது பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் அதே நாளில் வெளியாகிறது. இந்தப் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கின்றன.

தெலுங்கில், பாலகிருஷ்ணாவின் ‘வீர நரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’, அகிலின்‘ஏஜென்ட்’ படங்களும் அதே நாளில் வெளியாகின்றன.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், பொங்கலுக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளிக்க, திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2017ம் ஆண்டு தில் ராஜூ, பிலிம்சேம்பர் துணைத் தலைவராக இருந்தபோது, பண்டிகை காலங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதை நினைவூட்டி, இப்போது அறிக்கை வெளியிட்டுள்ளதுவாரிசு’ இரு மொழி படம் என்று தில் ராஜூ கூறியுள்ளார். ஆனால், இயக்குநர் வம்சி ‘இது தமிழ்ப்படம்தான்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், அதற்கு அதிக திரையரங்கை ஒதுக்கக் கூடாது என கூறி வருகின்றனர். இதனால், விஜய், அஜித் படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)