மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி கடத்தல்

0
கன்னியாகுமரி குளச்சல் :

 
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

கல்லூரி மாணவி கடத்தல்

 மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரின் 17 வயது மகள் நாகர்கோவில் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் பெற்றோர், மாணவியை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள். 

அப்போது கல்லூரி மாணவியை தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (வயது 24) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. 
4 பேர் மீது வழக்கு 

உடனே மாணவியின் குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் விசாரித்தனர். அப்போது அவர்கள் மாணவி இங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்துக்கொண்டு திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இது பற்றி கல்லூரி மாணவியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அருண், அவருடைய தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீதும் மாணவியை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)