தேசிய மாணவர் படையினர் ஒற்றுமை ஜோதி ஓட்டம்..

0

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு தேசிய மாணவர் படையினர் ஒற்றுமை ஜோதி ஓட்டத்தை உயர் அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு தேசிய மாணவர் படையினர் ஒற்றுமை ஜோதி ஓட்டத்தை உயர் அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


 என்.சி.சி.யின் 75-வது ஆண்டு பவள விழாவையொட்டி டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை தலைமை இயக்குனரகத்தின் சார்பில் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தேசிய ஒற்றுமை ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தேசிய மாணவர் படை துணை டைரக்டர் ஜெனரல் கமாடோர் அதுல்குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 கர்னல் கே.எஸ். பத்வார் தலைமையில் 10 ராணுவ அதிகாரிகள், என்.சி.சி. வீரர்கள் 100 பேர் செல்கிறார்கள். இந்த ஓட்டம் தமிழ்நாட்டில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர் மதுரை வழியாக கர்நாடகம், ஆந்திரா வழியாக புதுடெல்லிக்கு செல்கிறது. நாள் ஒன்றுக்கு 50 கி.மீ. தூரம் வீதம் 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டமாக கடந்து ஜனவரி மாதம் 26-ந்தேதிக்கு முன்பு புதுடெல்லியை அடைகிறார்கள். 
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)