தக்கலை அருகே லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி
தக்கலை : தக்கலை அருகே லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர சோதனை
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் வாகனங்களில் கடத்தப்படுகிறது. அவற்றை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பகுதியில் சென்றபோது, சாலையோரம் சந்தேகப்படும் வகையில் ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. மேலும், லாரியின் வாகன பதிவெண் அழிக்கப்பட்டு இருந்தது.
அதைதொடர்ந்து அருகில் நின்ற நபரை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அதில், அந்த நபர் மார்த்தாண்டத்தை சேர்ந்த மெக்கானிக் என்பதும், லாரி பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழுது நீக்க வந்ததாகவும், ஆனால் டிரைவரை காணவில்லை என்றும் கூறினார்.